ITV வெளியிட்ட வீடியோ: இலங்கை கடும் ஆத்திரமடைந்துள்ளது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் இயங்கிவரும் ஐ.ரிவி(ITV) தொலைக்காட்சி, சில போர்குற்ற ஆதார வீடியோக்களை வெளியிட்டது. இலங்கையில் கற்பழிக்கப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர்களது செவ்வி அடங்கிய வீடியோவே அதுவாகும். தன்னை இலங்கை இராணுவத்தினர் சுமார் 300 தடவை கற்பழித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். அத்தோடு தன்னை சிகரெட்டால் சுட்ட காயங்களையும் அவர் ஆதாரமாக காண்பித்தார். இலங்கையில் போர் நடைபெற்ற காலகட்டத்தில் போர்குற்றங்கள் இடம்பெற்றது. ஆனால் போர் முடிந்த பின்னரும் இது தொடர்கிறது என்பதனையே இந்த வீடியோ எடுத்துக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட இந்த வீடியோ காட்சி வெளியாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், தமது இராணுவத்தினர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்று பிரிகேடியர் ருவான் விக்னசூரிய தெரிவித்துள்ளார். வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் குறிவைத்து பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டில் எதுவித அர்தமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அடுத்த மாதம் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இன் நிலையில், இதுபோன்ற பாரிய குற்றச்சாட்டுகள் எழுவதை இலங்கை அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

No comments yet.

Schreibe einen Kommentar

Du musst angemeldet sein, um einen Kommentar abzugeben.

Zur Werkzeugleiste springen