சிறைக் கைதிகள் தொடர்பில் புதிய கட்டளைச் சட்டம் அறிமுகம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலப் பகுதியில் நன்னடைத்தையை வெளிப்படுத்தும் சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு வழங்கும் முறையிலான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நடைமுறையில் இருந்த சிறைச்சாலை கைதிகள் தொடர்பான கட்டளைச் சட்டத்தை மாற்றியமைப்பது பற்றி புதிய சட்ட திருத்தங்கள் உள்ளடக்கிய அறிக்கையை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இன்று கையளித்த போதே முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் இந்த தகவலை வெளியிட்டார்.

முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால், சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தை மீளமைப்பதற்காக பதினொரு பேரைக் கொண்ட குழுவிற்கு ஹெக்டர் யாப்பா தலைமை வகிக்கின்றார்.

No comments yet.

Schreibe einen Kommentar

Du musst angemeldet sein, um einen Kommentar abzugeben.

Zur Werkzeugleiste springen