Monatsarchive: Oktober 2013

ITV வெளியிட்ட வீடியோ: இலங்கை கடும் ஆத்திரமடைந்துள்ளது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் இயங்கிவரும் ஐ.ரிவி(ITV) தொலைக்காட்சி, சில போர்குற்ற ஆதார வீடியோக்களை வெளியிட்டது. இலங்கையில் கற்பழிக்கப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர்களது செவ்வி அடங்கிய வீடியோவே அதுவாகும். தன்னை இலங்கை இராணுவத்தினர் சுமார் 300 தடவை கற்பழித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

சிறைக் கைதிகள் தொடர்பில் புதிய கட்டளைச் சட்டம் அறிமுகம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலப் பகுதியில் நன்னடைத்தையை வெளிப்படுத்தும் சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு வழங்கும் முறையிலான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார். உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

Zur Werkzeugleiste springen