இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து

ஸ்ரீலங்கா அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை குறித்து தாங்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிருஸ்ணா இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைத்து அவர்கள் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு மகிந்த ராஜபக்கச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:சங்கதி