
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும்
புலன் பெயராது வாழும்
தமிழ் நலன் காக்க நாளும்
சுய சுகங்கள் துறந்து
தூய பணியாற்றி
அகவை இரண்டைத்தாண்டும்
அசையா தமிழ் வானொலி X சே
ஆண்டுகள் இரண்டென்ன
தமிழ் வாழும்வரை உன்
ஜனன நாள் திண்ணம் என
'தமிழ் காற்று' கலைஞர்களுக்கு
'தணல்' இணையம் சாற்றும்
வாழ்த்துப்பா மாலை இது!
'தணல்' இணையம்
17 .01 .2010 ஞாயிறு அன்று சுவிஸ் பாசெல் தமிழ் வானொலி X தனது இரண்டாவது வரலாற்று ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது. மேலதிக விபரங்களுக்கு தணலில் இணைக்கப்பட்டிருக்கும் வானொலி X இனுடைய இணையத்தளத்திற்கு செல்லவும்.